58. (அநியாயக்காரர்கள் வசிக்கின்ற) எந்த ஊரையும் மறுமை நாள் வருவதற்கு முன்னதாக நாம் அழித்து விடாமல் அல்லது கடினமான வேதனை செய்யாமல் விடுவதில்லை. இவ்வாறே (நம்மிடமுள்ள நிகழ்ச்சிக் குறிப்பாகிய) ‘லவ்ஹுல் மஹ்ஃபூளி'ல் வரையப்பட்டு இருக்கிறது.
الترجمة التاميلية
وَإِن مِّن قَرۡيَةٍ إِلَّا نَحۡنُ مُهۡلِكُوهَا قَبۡلَ يَوۡمِ ٱلۡقِيَٰمَةِ أَوۡ مُعَذِّبُوهَا عَذَابٗا شَدِيدٗاۚ كَانَ ذَٰلِكَ فِي ٱلۡكِتَٰبِ مَسۡطُورٗا
இன்னும் கியாம நாளைக்கு முன்னே (அழிச்சாட்டியம் செய்யும்) எந்த ஊராரையும் நாம் அழிக்காமலோ, அல்லது கடுமையான வேதனைக் கொண்டு வேதனை செய்யாமலோ இருப்பதில்லை இது(லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் வரையப்பெற்றே இருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
(அநியாயக்காரர்களின்) எந்த ஊரும் இல்லை, மறுமை நாளுக்கு முன்பாக நாம் அதை அழிப்பவர்களாக அல்லது கடுமையான வேதனையால் வேதனை செய்பவர்களாக இருந்தே தவிர. இது (நம்) ‘புத்தகத்தில்’எழுதப்பட்டதாக இருக்கின்றது.
الترجمة التاميلية - عمر شريف