96. (இன்னும்,) நீர் கூறுவீராக: ‘‘எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்.
الترجمة التاميلية
قُلۡ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدَۢا بَيۡنِي وَبَيۡنَكُمۡۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا
"எனக்கிடையிலும், உங்களுக்கிடையிலும் சாட்சியாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்; நிச்சயமாக அவன் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிந்தவனாகவும், (யாவற்றையும்) பார்ப்பவனாகவும் இருக்கின்றான்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே) கூறுவீராக! “எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமாகி விட்டான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிந்தவனாக உற்றுநோக்கினவனாக இருக்கின்றான்.
الترجمة التاميلية - عمر شريف