23. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை. நிச்சயமாக அவன் கர்வம் கொண்ட (இ)வர்களை விரும்புவதில்லை.
الترجمة التاميلية
لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعۡلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعۡلِنُونَۚ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلۡمُسۡتَكۡبِرِينَ
சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் அறிவான் என்பதில் சந்தேகமே இல்லை. நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்.
الترجمة التاميلية - عمر شريف