26. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) நிச்சயமாக சூழ்ச்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களின் (சூழ்ச்சிக்) கட்டடத்தை அடியோடு பெயர்த்து அவர்கள் (தலை) மீதே அதன் முகடு விழும்படி செய்தான். அவர்கள் அறிந்துகொள்ள முடியாத விதத்தில் வேதனையும் அவர்களை வந்தடைந்தது.
الترجمة التاميلية
قَدۡ مَكَرَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡ فَأَتَى ٱللَّهُ بُنۡيَٰنَهُم مِّنَ ٱلۡقَوَاعِدِ فَخَرَّ عَلَيۡهِمُ ٱلسَّقۡفُ مِن فَوۡقِهِمۡ وَأَتَىٰهُمُ ٱلۡعَذَابُ مِنۡ حَيۡثُ لَا يَشۡعُرُونَ
நிச்சயமாக, இவர்களுக்கு முன்னர் இருந்தார்களே அவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சிகள் செய்தார்கள்; அதனால், அல்லாஹ் அவர்களுடைய கட்டிடத்தை அடிப்படையோடு பெயர்த்து விட்டான்; ஆகவே அவர்களுக்கு மேலே இருந்து முகடு அவர்கள் மீது விழுந்தது அவர்கள் அறிந்து கொள்ள முடியாத புறத்திலிருந்து அவர்களுக்கு வேதனையும் வந்தது.
Jan Trust Foundation - Tamil translation
திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து வந்தான். (அதை அழித்தான்.) அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் அறி(ந்து கொள்ள முடி)யாத விதத்தில் வேதனையும் அவர்களுக்கு வந்தது.
الترجمة التاميلية - عمر شريف