52. வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுக்கு என்றென்றும் வழிபடுவது அவசியம். ஆகவே, அந்த அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் பயப்படுகிறீர்கள்?
الترجمة التاميلية
وَلَهُۥ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِ وَلَهُ ٱلدِّينُ وَاصِبًاۚ أَفَغَيۡرَ ٱللَّهِ تَتَّقُونَ
வானங்களிலும், பூமியிலும் உள்ளவை(யெல்லாம்) அவனுக்கே (சொந்தமானவை) அவனுக்கே (என்றென்றும்) வழிபாடு உரியதாக இருக்கிறது (உண்மை இவ்வாறிருக்க) அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் அஞ்சகிறீர்கள்?
Jan Trust Foundation - Tamil translation
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! கீழ்ப்படிதல் (கட்டாயமாக, நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியது. ஆகவே, (அந்த) அல்லாஹ் அல்லாததையா (கடவுளாக ஆக்கிக்கொண்டு அதை) அஞ்சுகிறீர்கள்?
الترجمة التاميلية - عمر شريف