53. உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வந்தவைதான். உங்களை ஒரு தீங்கு அணுகும் போது அவனிடமே முறையிடுகிறீர்கள்.
الترجمة التاميلية
وَمَا بِكُم مِّن نِّعۡمَةٖ فَمِنَ ٱللَّهِۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيۡهِ تَجۡـَٔرُونَ
மேலும், எந்த நிஃமத் (பாக்கியம்) உங்களிடம் இருந்தாலும் அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதேயாகும்; பின்னர் ஏதாவது ஒரு துன்பம் உங்களைத் தொட்டு விட்டால் அவனிடமே (அதை நீக்குமாறு பிரலாபித்து) நீங்கள் முறையிடுகிறீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
உங்களிடம் அருட்கொடையில் எது உள்ளதோ அது அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு கிடைத்தது). பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்தித்து அதை நீக்கக் கோரி) கதறுகிறீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف