56. நாம் அவர்களுக்குக் கொடுத்த பொருள்களில் ஒரு பாகத்தைத் தங்கள் தெய்வங்களுக்கென்று குறிப்பிட்டுக் கூறுகின்றனர். இதை அவர்கள் அறிந்துகொள்ளவே முடியாது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் கற்பனையாகக் கூறும் இப்பொய்(க் கூற்று)களைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் கேள்வி கேட்கப்படுவீர்கள்.
الترجمة التاميلية
وَيَجۡعَلُونَ لِمَا لَا يَعۡلَمُونَ نَصِيبٗا مِّمَّا رَزَقۡنَٰهُمۡۗ تَٱللَّهِ لَتُسۡـَٔلُنَّ عَمَّا كُنتُمۡ تَفۡتَرُونَ
இன்னும், அவர்கள் நாம் அவர்களுக்கு அளித்துள்ளதில் ஒரு பாகத்தைத் தாம் அறியாத (பொய் தெய்வங்களுக்காக) குறிப்பிட்டு வைக்கிறார்கள்; அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நீங்கள் இட்டுக் கட்டிக்கொண்டிருந்த (இவை) பற்றி நிச்சயமாக கேட்கப்படுவீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தைத் தாம் அறியாத (கற்சிலைகள், பிசாசுகள் போன்ற)வற்றுக்கு ஆக்குகின்றனர் (-அதை வைத்து பூஜை செய்கின்றனர்). அல்லாஹ் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف