120. நிச்சயமாக இப்றாஹீம் அல்லாஹ்வுக்கு மிக்க பயந்து நடக்கும் மிகுந்த மார்க்கப்பற்றுடைய வழிகாட்டியாக இருந்தார். மேலும், (இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களில் அவர் இருக்கவில்லை.
الترجمة التاميلية
إِنَّ إِبۡرَٰهِيمَ كَانَ أُمَّةٗ قَانِتٗا لِّلَّهِ حَنِيفٗا وَلَمۡ يَكُ مِنَ ٱلۡمُشۡرِكِينَ
நிச்சயமாக இப்றாஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார் மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக இப்றாஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்வுக்கு மிக பணிந்தவராக கொள்கை உறுதியுடையவராக இருந்தார். இணைவைப்பவர்களில் (ஒருவராக) அவர் இருக்கவில்லை.
الترجمة التاميلية - عمر شريف