47. அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய ஒரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக்கொள்ள மாட்டான் என்று அச்சமற்று இருக்கின்றனரா? (அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவன், மிகக் கருணையுடையவன் ஆவான். (ஆதலால்தான், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.)
الترجمة التاميلية
أَوۡ يَأۡخُذَهُمۡ عَلَىٰ تَخَوُّفٖ فَإِنَّ رَبَّكُمۡ لَرَءُوفٞ رَّحِيمٌ
அல்லது. அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் பொழுதே (அல்லாஹ்) அவர்களைப் பிடிக்கமாட்டான் (என்று அச்சமற்றவர்களாக இருக்கிறார்களா?) நிச்சயமாக உங்கள் இறைவன் இரக்கமுடையவன்; பெருங் கிருபையுடையவன்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் (கொஞ்சமாக) குறைத்து அவர்களை அவன் பிடி(த்து அழி)த்து விடுவதை (அச்சமற்றனரா?). (மக்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)
الترجمة التاميلية - عمر شريف