172. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
الترجمة التاميلية
ٱلَّذِينَ ٱسۡتَجَابُواْ لِلَّهِ وَٱلرَّسُولِ مِنۢ بَعۡدِ مَآ أَصَابَهُمُ ٱلۡقَرۡحُۚ لِلَّذِينَ أَحۡسَنُواْ مِنۡهُمۡ وَٱتَّقَوۡاْ أَجۡرٌ عَظِيمٌ
அவர்கள் எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்; அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். அவர்களில் நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு மகத்தான கூலி உண்டு.
الترجمة التاميلية - عمر شريف