29. (நபியே!) கூறுவீராக: உங்கள் மனங்களில் நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகிறான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية
قُلۡ إِن تُخۡفُواْ مَا فِي صُدُورِكُمۡ أَوۡ تُبۡدُوهُ يَعۡلَمۡهُ ٱللَّهُۗ وَيَعۡلَمُ مَا فِي ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِي ٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்."
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான். இன்னும் வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) அறிவான். அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية - عمر شريف