35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,
الترجمة التاميلية
إِذۡ قَالَتِ ٱمۡرَأَتُ عِمۡرَٰنَ رَبِّ إِنِّي نَذَرۡتُ لَكَ مَا فِي بَطۡنِي مُحَرَّرٗا فَتَقَبَّلۡ مِنِّيٓۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறியதையும்.
Jan Trust Foundation - Tamil translation
இம்ரானுடைய மனைவி, "என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன்.ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்'' எனக் கூறியசமயத்தை நினைவு கூறுவீராக!
الترجمة التاميلية - عمر شريف