49. இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்,)
الترجمة التاميلية
وَرَسُولًا إِلَىٰ بَنِيٓ إِسۡرَـٰٓءِيلَ أَنِّي قَدۡ جِئۡتُكُم بِـَٔايَةٖ مِّن رَّبِّكُمۡ أَنِّيٓ أَخۡلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيۡـَٔةِ ٱلطَّيۡرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيۡرَۢا بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُبۡرِئُ ٱلۡأَكۡمَهَ وَٱلۡأَبۡرَصَ وَأُحۡيِ ٱلۡمَوۡتَىٰ بِإِذۡنِ ٱللَّهِۖ وَأُنَبِّئُكُم بِمَا تَأۡكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمۡۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَةٗ لَّكُمۡ إِن كُنتُم مُّؤۡمِنِينَ
இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்).
Jan Trust Foundation - Tamil translation
இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) "நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அது பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமிப்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது (என்று கூறினார்).
الترجمة التاميلية - عمر شريف