ﮰ
                    ترجمة معاني سورة يس
 باللغة التاميلية من كتاب الترجمة التاميلية - عمر شريف
            .
            
                            
            
    ﰡ
                                                                                                                
                                    ﭬ
                                    ﰀ
                                                                        
                    அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!
                                                                        
                                                                                                                
                                    ﭮﭯ
                                    ﰁ
                                                                        
                    ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!
                                                                        நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்.
                                                                        நேரான பாதையில் நீர் இருக்கின்றீர்.
                                                                        மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது.
                                                                        ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்.
                                                                        அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின்) வாக்கு திட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
                                                                        நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகள் மீது அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை) உயர்த்தியவர்களாக இருக்கின்றனர்.
                                                                        அவர்களுக்கு முன்னும் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னும் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்களை குருடாக்கி விட்டோம். ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்.
                                                                        நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்கள் மீது (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
                                                                        நீர் எச்சரிப்பதெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவரைத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பைக் கொண்டும் கண்ணியமான கூலியைக் கொண்டும் நற்செய்தி கூறுவீராக!
                                                                        நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கின்றோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்.
                                                                        அவர்களுக்கு அந்த ஊர் வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
                                                                        அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவரைக்கொண்டு பலப்படுத்தினோம். அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்.
                                                                        அவர்கள் கூறினர்: நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்கள் அன்றி வேறு இல்லை. ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்கின்றவர்களாகவே தவிர இல்லை.
                                                                        அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.
                                                                        தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது (உங்களை நிர்ப்பந்திப்பது கடமை) இல்லை.
                                                                        அவர்கள் கூறினர்: நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறிவோம். இன்னும் எங்களிடமிருந்து வலிமிகுந்த வேதனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.
                                                                        அவர்கள் கூறினர்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகின்ற மக்கள் ஆவீர்கள்.
                                                                        பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்தார். அவர் கூறினார்: என் மக்களே! தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.
                                                                        உங்களிடம் கூலியை கேட்காதவர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்.
                                                                        என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
                                                                        அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது.
                                                                        அப்போது, (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.
                                                                        நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு (நான் சொல்வதை) செவிசாயுங்கள்!
                                                                        (அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: “(எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும் என்னை கண்ணியமானவர்களில் அவன் ஆக்கியதையும்) என் மக்கள் அறிய வேண்டுமே!
                                                                         எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும் என்னை கண்ணியமானவர்களில் அவன் ஆக்கியதையும் (என் மக்கள் அறிய வேண்டுமே!).”
                                                                        அவருக்குப் பின்னர் அவருடைய மக்கள் மீது வானத்தில் இருந்து ஒரு படையை நாம் இறக்கவில்லை. நாம் (அப்படி) இறக்குபவர்களாகவும் இல்லை.
                                                                        அது (-அந்த வேதனை) ஒரே ஒரு சப்தமாகவே தவிர (வேறு ஒன்றாக) இருக்கவில்லை. ஆகவே, அப்போது அவர்கள் அழிந்து விட்டார்கள்.
                                                                        அடியார்கள் மீது நிகழ்ந்த துக்கமே! அவர்களிடம் எந்த ஒரு தூதரும் வரவில்லை அவர்கள் அவரை பரிகாசம் செய்பவர்களாக இருந்தே தவிர.
                                                                        அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் பக்கம் திரும்பி வரமாட்டார்கள் என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?
                                                                        (அவர்கள்) எல்லோரும் இல்லை, நம்மிடம் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே தவிர.
                                                                        அவர்களுக்கு (நமது) அத்தாட்சி இறந்துபோன (-காய்ந்து போன) பூமியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். அதிலிருந்து நாம் வித்துக்களை வெளியாக்கினோம். அதில் இருந்துதான் அவர்கள் சாப்பிடுகின்றார்கள்.
                                                                        பேரித்த மரங்கள் இன்னும் திராட்சைகளின் தோட்டங்களை அதில் நாம் ஏற்படுத்தினோம். ஊற்றுக் கண்களை அதில் உதித்தோடச் செய்தோம்.
                                                                        அவனுடைய (-அவன் படைத்த) கனிகளில் இருந்து அவர்கள் புசிப்பதற்காக (அவன் அவர்களுக்கு அவற்றை உற்பத்தி செய்து கொடுத்தான்). இவற்றை அவர்களின் கரங்கள் செய்யவில்லை. (அல்லாஹ் இவற்றை கொடுத்ததற்காக அவனுக்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
                                                                        பூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (தாவரங்களிலும்) அவர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் பல வகைகளையெல்லாம் படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.
                                                                        இன்னும் அவர்களுக்கு அத்தாட்சி இரவாகும். அதிலிருந்து பகலை நாம் உரித்தெடுக்கின்றோம் (-வெளிப்படுத்துகின்றோம்). அப்போது அவர்கள் இருளில் ஆகிவிடுகின்றனர்.
                                                                        சூரியன் தனது இருப்பிடத்தை நோக்கி ஓடுகிறது. அது நன்கறிந்த மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். (-திட்டமிடுதலாகும்)
                                                                        சந்திரனை - அதை பல தங்குமிடங்களில் நாம் திட்டமிட்டோம். இறுதியாக அது பழைய (காய்ந்த) பேரிச்சை குலையைப் போல் திரும்பிவிடுகின்றது.
                                                                        சூரியன் - அது சந்திரனை அடைவது அதற்கு ஆகுமாகாது. இரவு பகலை முந்திவிடாது. ஒவ்வொன்றும் ஒரு கோளில் நீந்துகின்றன. (-சுற்றுகின்றன)
                                                                        இன்னும் அவர்களுக்கு அத்தாட்சியாவது நிச்சயமாக நாம் (மக்களால்) நிரம்பிய கப்பலில் அவர்களின் சந்ததிகளை பயணிக்க வைத்தோம்.
                                                                        இன்னும் அதைப் போன்று அவர்கள் வாகனிப்பதை (-பல வகையான வாகனங்களை) நாம் அவர்களுக்கு படைத்தோம்.
                                                                        நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை. இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.
                                                                        எனினும் நமது கருணையினாலும் சில காலம் வரை (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (நாம் அவர்களை கடலில் மூழ்கடிப்பதில்லை).
                                                                        உங்களுக்கு முன்னுள்ளதையும் (முந்திய சமுதாயத்திற்கு இறக்கப்பட்ட தண்டனையையும்) உங்களுக்கு பின்னுள்ளதையும் (மறுமையின் தண்டனையையும்) நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்! என்று அவர்களுக்கு கூறப்பட்டால்... (அவர்கள் புறக்கணித்து விலகிச் சென்று விடுகின்றனர்.)
                                                                        அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் இருந்து ஏதும் ஓர் அத்தாட்சி வருவதில்லை அதை புறக்கணித்தவர்களாக அவர்கள் இருந்தே தவிர.
                                                                        அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகின்றனர்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகின்றனர்).
                                                                        இன்னும், இந்த வாக்கு எப்போது நிகழும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் என்று அவர்கள் கூறுகின்றனர்.
                                                                        ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது (ஒரு நாள்) அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (அப்போது) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்.
                                                                        அவர்கள் மரண சாசனம் கூறுவதற்கு சக்தி பெற மாட்டார்கள். இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள். (அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்).
                                                                        சூரில் ஊதப்படும். அப்போது அவர்கள் கப்ருகளில் இருந்து தங்கள் இறைவன் பக்கம் விரைவாக வெளியேறி வருவார்கள்.
                                                                        அவர்கள் (-இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் தூங்குமிடத்தில் இருந்து எழுப்பியது?” (அதற்குப் பதிலாக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்:) “இது (-இந்த மறுமை நாள்) ரஹ்மான் வாக்களித்ததும் தூதர்கள் உண்மையாகக் கூறியதும் ஆகும்.
                                                                        அது (-மறுமையில் நிகழும்) ஒரே ஒரு சப்தமே தவிர (வேறு ஒன்றாக) இருக்காது. அப்போது அவர்கள் அனைவரும் நம்மிடம் ஆஜராக்கப்படுவார்கள்.
                                                                        இன்றைய தினம் எந்த ஓர் ஆன்மாவும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்.
                                                                        நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (முக்கியமான) வேளையில் இன்பமனுபவிப்பார்கள்.
                                                                        அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் (இளைப்பாரிக் கொண்டு) கட்டில்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
                                                                        அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும் அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.
                                                                        (உங்கள் மீது) சலாம் உண்டாகட்டும். மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து (சலாம்) கூறப்படும்.
                                                                        குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!
                                                                        ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.
                                                                        இன்னும் என்னை வணங்குங்கள் (என்றும் உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா?) இதுதான் நேரான பாதையாகும்.
                                                                        அவன் உங்களில் அதிகமான படைப்புகளை (-மக்களை) திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக இருக்கவில்லையா?
                                                                        நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகம் இதுதான்.
                                                                        இன்று அதில் நீங்கள் பொசுங்குங்கள் நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.
                                                                        இன்று நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிடுவோம். அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.
                                                                        நாம் நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்பார்கள்! (அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக நாம் அவர்களை இவ்வுலகிலேயே தண்டிக்க நாடி இருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். அவர்கள் எதையும் பார்க்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருந்திருப்பார்கள்.)
                                                                        நாம் நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்திருப்போம். (அவர்களை உருமாற்றி (அழித்து) இருப்போம்) ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (வேதனை இறங்கும் போது அவர்கள் வெளியில் இருந்தால் தங்கள் இல்லங்களுக்கு) திரும்பி வரவும் மாட்டார்கள்.
                                                                        நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கின்றோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா? (இதை செய்பவன் படைப்புகளை அழித்து மீண்டும் படைக்க ஆற்றல் உள்ளவன்)
                                                                        நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறு எதுவும் இல்லை.
                                                                        (உள்ளத்தால்) உயிருள்ளவராக இருக்கின்றவரை அது (-குர்ஆன்) எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்).
                                                                        நிச்சயமாக நாம் அவர்களுக்கு நமது கரங்கள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்ததை அவர்கள் (சிந்தித்து) பார்க்கவில்லையா? அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கின்றார்கள்.
                                                                        நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. அவற்றில் இருந்து அவர்கள் புசிக்கவும் செய்கின்றார்கள்.
                                                                        இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் அதிகமான) பலன்களும் குடிபானங்களும் உள்ளன. (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
                                                                        அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். தாங்கள் உதவி செய்யப்படுவதற்காக.
                                                                        அவர்கள் (-அந்த சிலைகள்) அவர்களுக்கு (-அவற்றை வணங்குகின்றவர்களுக்கு) உதவுவதற்கு சக்தி பெறமாட்டார்கள். அவர்கள் (சிலை வணங்கிகள்) அவர்கள் முன் (-சிலைகளுக்கு முன்) தயாராக இருக்கின்ற ராணுவமாக இருக்கின்றார்கள். (அந்த சிலைகளை பாதுகாக்கின்றனர்; அதற்கு யாரும் கெடுதி செய்தால் அதற்காக கொதித்து எழுகின்றனர்.)
                                                                        ஆகவே, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம்.
                                                                        நிச்சயமாக நாம் அவனை (-மனிதனை) ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை மனிதன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கின்றான்.
                                                                        அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகின்றான்: எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கின்ற போது யார் உயிர்ப்பிப்பான்?
                                                                        (நபியே!) கூறுவீராக! அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும் அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.
                                                                        அவன் பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்துகின்றான். அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள்.
                                                                        வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்.
                                                                        அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம் அதற்கு ஆகு என்று அவன் கூறுவதுதான். அது ஆகிவிடும்.
                                                                        எவனுடைய கரத்தில் எல்லாவற்றின் பேராட்சி இருக்கின்றதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.