33. (அவ்வக்கிரமக்காரர்களோ தங்கள் உயிரைக் கைப்பற்றுவதற்காக) அவர்களிடம் வானவர்கள் வருவதையோ அல்லது உங்கள் இறைவனின் கட்டளை(ப்படி வேதனை) வருவதையோ தவிர (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்து கொண்டிருந்தனர். அல்லாஹ் இவர்களுக்கு ஒரு தீங்கும் இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
الترجمة التاميلية
هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَـٰٓئِكَةُ أَوۡ يَأۡتِيَ أَمۡرُ رَبِّكَۚ كَذَٰلِكَ فَعَلَ ٱلَّذِينَ مِن قَبۡلِهِمۡۚ وَمَا ظَلَمَهُمُ ٱللَّهُ وَلَٰكِن كَانُوٓاْ أَنفُسَهُمۡ يَظۡلِمُونَ
(ஆனால் அக்கிரமக்காரர்களோ) தங்களிடம் (உயிர்களைக் கைப்பற்றுவதற்காக) மலக்குகள் வருவதையோ, அல்லது உம் இறைவனுடைய (வேதனை தரும்) கட்டளை வருவதையோ தவிர வேறு எதை அவர்கள் எதிர் பார்க்கின்றனர்? இவர்களுக்கு முன்னிருந்தோரும் இவ்வாறே (அநியாயம்) செய்தார்கள்; இவர்களுக்கு அல்லாஹ் அநியாயம் எதுவும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
வானவர்கள் தங்களிடம் வருவதை அல்லது உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்கே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்.
الترجمة التاميلية - عمر شريف