43. (நபியே!) உமக்கு முன்னர் வஹ்யி அறிவித்து நாம் அவர்களிடம் அனுப்பிவைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தான். ஆகவே, (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இதை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்'' (என்று கூறுவீராக.)
الترجمة التاميلية
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ إِلَّا رِجَالٗا نُّوحِيٓ إِلَيۡهِمۡۖ فَسۡـَٔلُوٓاْ أَهۡلَ ٱلذِّكۡرِ إِن كُنتُمۡ لَا تَعۡلَمُونَ
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறெல்லர் ஆகவே (அவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால். (முந்திய) வேத ஞானம் பெற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுவீராக).
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்”(என்று கூறுவீராக!).
الترجمة التاميلية - عمر شريف