71. உங்களில் சிலரைவிட சிலரை செல்வத்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கிறான். அப்படி மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்களுக்கு கட்டுப்பட்ட (வேலைக்காரர், அடிமை ஆகிய)வர்கள் தங்கள் செல்வத்தில் (தங்களுக்கு) சமமானவர்களாக இருந்தும் (முறைப்படி) அதை அவர்களுக்கு கொடுப்பதில்லை. (இப்படி செய்வதன் மூலம் அவர்களுக்கு அளித்திருக்கின்ற) அல்லாஹ்வின் அருளை அவர்கள் நிராகரிக்கின்றனரா?
الترجمة التاميلية
وَٱللَّهُ فَضَّلَ بَعۡضَكُمۡ عَلَىٰ بَعۡضٖ فِي ٱلرِّزۡقِۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُواْ بِرَآدِّي رِزۡقِهِمۡ عَلَىٰ مَا مَلَكَتۡ أَيۡمَٰنُهُمۡ فَهُمۡ فِيهِ سَوَآءٌۚ أَفَبِنِعۡمَةِ ٱللَّهِ يَجۡحَدُونَ
அல்லாஹ் உங்களில் சிலரை சிலரைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் வலக்கரங்களுக்கு உட்பட்டு(த் தம் ஆதிக்கத்தில்) இருப்பவர்களிடம் கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை (அவ்வாறிருக்க) அல்லாஹ்வின் அருட்கொடையையா? இவர்கள் மறுக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
உங்களில் சிலரை சிலரைவிட வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக (-மேல்மிச்சமான செல்வத்தை தங்கள் அடிமைகளுக்கு தரக்கூடியவர்களாக) இல்லை. அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களே. அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கின்றனர்?
الترجمة التاميلية - عمر شريف