101. நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார்.
الترجمة التاميلية
وَكَيۡفَ تَكۡفُرُونَ وَأَنتُمۡ تُتۡلَىٰ عَلَيۡكُمۡ ءَايَٰتُ ٱللَّهِ وَفِيكُمۡ رَسُولُهُۥۗ وَمَن يَعۡتَصِم بِٱللَّهِ فَقَدۡ هُدِيَ إِلَىٰ صِرَٰطٖ مُّسۡتَقِيمٖ
அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
Jan Trust Foundation - Tamil translation
நீங்களோ உங்கள் மீது அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான ஒரு பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்.
الترجمة التاميلية - عمر شريف