105. எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு.
الترجمة التاميلية
وَلَا تَكُونُواْ كَٱلَّذِينَ تَفَرَّقُواْ وَٱخۡتَلَفُواْ مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡبَيِّنَٰتُۚ وَأُوْلَـٰٓئِكَ لَهُمۡ عَذَابٌ عَظِيمٞ
(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள்) பிரிந்து, (அவற்றுக்கு) முரண்பட்டவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். (சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் அவர்களுக்கு பெரிய வேதனை உண்டு. ஆக, முகங்கள் கருத்தவர்கள் (அவர்களை நோக்கி,) "நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை சுவையுங்கள் (என்று கூறப்படும்).''
الترجمة التاميلية - عمر شريف