125. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறிய போதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் வானவர்களால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவிசெய்வான்.
الترجمة التاميلية
بَلَىٰٓۚ إِن تَصۡبِرُواْ وَتَتَّقُواْ وَيَأۡتُوكُم مِّن فَوۡرِهِمۡ هَٰذَا يُمۡدِدۡكُمۡ رَبُّكُم بِخَمۡسَةِ ءَالَٰفٖ مِّنَ ٱلۡمَلَـٰٓئِكَةِ مُسَوِّمِينَ
ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
Jan Trust Foundation - Tamil translation
ஆம். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால், அவர்களுடைய இதே அவசரத்தில் (அவர்களும்) உங்களிடம் (போருக்கு) வந்தால், வானவர்களிலிருந்து (தங்களை) அடையாளமிடக்கூடிய ஐயாயிரத்தைக் கொண்டு இறைவன் உங்களுக்கு உதவுவான்.
الترجمة التاميلية - عمر شريف