136. இவர்களுக்குப் பிரதிபலன், அவர்களின் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சொர்க்கங்களும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!
الترجمة التاميلية
أُوْلَـٰٓئِكَ جَزَآؤُهُم مَّغۡفِرَةٞ مِّن رَّبِّهِمۡ وَجَنَّـٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَاۚ وَنِعۡمَ أَجۡرُ ٱلۡعَٰمِلِينَ
அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
அவர்களின் கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும் சொர்க்கங்களும் ஆகும். (அவர்கள்) அதில் நிரந்தரமானவர்கள். நன்மைபுரிவோரின் கூலி சிறந்ததாகிவிட்டது!
الترجمة التاميلية - عمر شريف