149. நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.
الترجمة التاميلية
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓاْ إِن تُطِيعُواْ ٱلَّذِينَ كَفَرُواْ يَرُدُّوكُمۡ عَلَىٰٓ أَعۡقَٰبِكُمۡ فَتَنقَلِبُواْ خَٰسِرِينَ
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது (மார்க்கத்தை விட்டும்) உங்களைத் திருப்பி விடுவார்கள். ஆகவே, (நீங்கள்) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்.
الترجمة التاميلية - عمر شريف