15. (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.
الترجمة التاميلية
۞قُلۡ أَؤُنَبِّئُكُم بِخَيۡرٖ مِّن ذَٰلِكُمۡۖ لِلَّذِينَ ٱتَّقَوۡاْ عِندَ رَبِّهِمۡ جَنَّـٰتٞ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَا وَأَزۡوَٰجٞ مُّطَهَّرَةٞ وَرِضۡوَٰنٞ مِّنَ ٱللَّهِۗ وَٱللَّهُ بَصِيرُۢ بِٱلۡعِبَادِ
(நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமானவர்கள். பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.''
الترجمة التاميلية - عمر شريف