170. அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர்.
الترجمة التاميلية
فَرِحِينَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ وَيَسۡتَبۡشِرُونَ بِٱلَّذِينَ لَمۡ يَلۡحَقُواْ بِهِم مِّنۡ خَلۡفِهِمۡ أَلَّا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ
தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததைக் கொண்டு மகிழ்ச்சியடைந்தவர்களாக (இருப்பார்கள்). (போரில் கொல்லப்பட்டு) தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களைக் கொண்டு, "அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைவார்கள்.
الترجمة التاميلية - عمر شريف