176. (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச்செய்ய அல்லாஹ் விரும்புகிறான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அவர்களுக்கு பெரிய வேதனையும் உண்டு.
الترجمة التاميلية
وَلَا يَحۡزُنكَ ٱلَّذِينَ يُسَٰرِعُونَ فِي ٱلۡكُفۡرِۚ إِنَّهُمۡ لَن يَضُرُّواْ ٱللَّهَ شَيۡـٔٗاۚ يُرِيدُ ٱللَّهُ أَلَّا يَجۡعَلَ لَهُمۡ حَظّٗا فِي ٱلۡأٓخِرَةِۖ وَلَهُمۡ عَذَابٌ عَظِيمٌ
"குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். அவர்களுக்கு மகத்தான வேதனையுமுண்டு.
الترجمة التاميلية - عمر شريف