184. (இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீர் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உமக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்தே இருந்தனர்.
الترجمة التاميلية
فَإِن كَذَّبُوكَ فَقَدۡ كُذِّبَ رُسُلٞ مِّن قَبۡلِكَ جَآءُو بِٱلۡبَيِّنَٰتِ وَٱلزُّبُرِ وَٱلۡكِتَٰبِ ٱلۡمُنِيرِ
எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும் வேத நூல்களையும் ஒளிவீசுகிற வேதத்தையும் கொண்டு வந்த தூதர்களும் திட்டமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.
الترجمة التاميلية - عمر شريف