187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் ‘‘(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது'' என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! அவர்களுக்கு) ஞாபகமூட்டுவீராக. (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் பெற்றுக்கொண்டது மகா கெட்டதாகும்.
الترجمة التاميلية
وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ لَتُبَيِّنُنَّهُۥ لِلنَّاسِ وَلَا تَكۡتُمُونَهُۥ فَنَبَذُوهُ وَرَآءَ ظُهُورِهِمۡ وَٱشۡتَرَوۡاْ بِهِۦ ثَمَنٗا قَلِيلٗاۖ فَبِئۡسَ مَا يَشۡتَرُونَ
தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
Jan Trust Foundation - Tamil translation
"அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும், அதை மறைக்கக்கூடாது'' என்று வேதம் கொடுக்கப்பட்டவர்களின் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கிய சமயத்தை நினைவு கூறுங்கள். அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும் அதற்குப் பகரமாகச் சொற்பகிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டது.
الترجمة التاميلية - عمر شريف