195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது.
الترجمة التاميلية
فَٱسۡتَجَابَ لَهُمۡ رَبُّهُمۡ أَنِّي لَآ أُضِيعُ عَمَلَ عَٰمِلٖ مِّنكُم مِّن ذَكَرٍ أَوۡ أُنثَىٰۖ بَعۡضُكُم مِّنۢ بَعۡضٖۖ فَٱلَّذِينَ هَاجَرُواْ وَأُخۡرِجُواْ مِن دِيَٰرِهِمۡ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَٰتَلُواْ وَقُتِلُواْ لَأُكَفِّرَنَّ عَنۡهُمۡ سَيِّـَٔاتِهِمۡ وَلَأُدۡخِلَنَّهُمۡ جَنَّـٰتٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ ثَوَابٗا مِّنۡ عِندِ ٱللَّهِۚ وَٱللَّهُ عِندَهُۥ حُسۡنُ ٱلثَّوَابِ
ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; "உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
Jan Trust Foundation - Tamil translation
ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளித்தான், "உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரா சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயம் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை நுழைப்பேன்.'' அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை வழங்கப்படுவார்கள்). அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு.
الترجمة التاميلية - عمر شريف