8. (மேலும், அவர்கள்) ‘‘எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்கள் உள்ளங்கள் (அதில் இருந்து) தவறி விடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!''
الترجمة التاميلية
رَبَّنَا لَا تُزِغۡ قُلُوبَنَا بَعۡدَ إِذۡ هَدَيۡتَنَا وَهَبۡ لَنَا مِن لَّدُنكَ رَحۡمَةًۚ إِنَّكَ أَنتَ ٱلۡوَهَّابُ
"எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!" (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
Jan Trust Foundation - Tamil translation
"எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! உன்னிடமிருந்து கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் வாரி வழங்குபவன்!
الترجمة التاميلية - عمر شريف