92. உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரை நிச்சயமாக நீங்கள் நன்மையை அடைய மாட்டீர்கள். நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான்.
الترجمة التاميلية
لَن تَنَالُواْ ٱلۡبِرَّ حَتَّىٰ تُنفِقُواْ مِمَّا تُحِبُّونَۚ وَمَا تُنفِقُواْ مِن شَيۡءٖ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٞ
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(செல்வத்தில்) நீங்கள் நேசிப்பதிலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை மிக நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف