113. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர்.
الترجمة التاميلية
۞لَيۡسُواْ سَوَآءٗۗ مِّنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ أُمَّةٞ قَآئِمَةٞ يَتۡلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيۡلِ وَهُمۡ يَسۡجُدُونَ
(ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
அவர்கள் சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள்; அவர்கள் சிரம் பணி(ந்து தொழு)கிறார்கள். (காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.)
الترجمة التاميلية - عمر شريف