119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்.''
الترجمة التاميلية
هَـٰٓأَنتُمۡ أُوْلَآءِ تُحِبُّونَهُمۡ وَلَا يُحِبُّونَكُمۡ وَتُؤۡمِنُونَ بِٱلۡكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمۡ قَالُوٓاْ ءَامَنَّا وَإِذَا خَلَوۡاْ عَضُّواْ عَلَيۡكُمُ ٱلۡأَنَامِلَ مِنَ ٱلۡغَيۡظِۚ قُلۡ مُوتُواْ بِغَيۡظِكُمۡۗ إِنَّ ٱللَّهَ عَلِيمُۢ بِذَاتِ ٱلصُّدُورِ
(முஃமின்களே!) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது "நாங்களும் நம்புகிறோம்" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்".
Jan Trust Foundation - Tamil translation
நீங்கள் இவர்களை(யா) நேசிக்கிறீர்கள்! அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. வேதம் எல்லாவற்றையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தால், "நம்பிக்கை கொண்டோம்'' எனக் கூறுகின்றனர். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கின்றனர். (நபியே!) கூறுவீராக: "உங்கள் கோபத்தினால் சாவுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.''
الترجمة التاميلية - عمر شريف