134. அவர்கள் (எவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்துவிடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கிறான்.
الترجمة التاميلية
ٱلَّذِينَ يُنفِقُونَ فِي ٱلسَّرَّآءِ وَٱلضَّرَّآءِ وَٱلۡكَٰظِمِينَ ٱلۡغَيۡظَ وَٱلۡعَافِينَ عَنِ ٱلنَّاسِۗ وَٱللَّهُ يُحِبُّ ٱلۡمُحۡسِنِينَ
(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள்) செல்வத்திலும், வறுமையிலும் தர்மம் புரிபவர்கள்; கோபத்தை மென்றுவிடுபவர்கள்; மக்களை மன்னித்து விடுபவர்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோரை நேசிக்கிறான்.
الترجمة التاميلية - عمر شريف