145. ஓர் ஆத்மா அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகிறாரோ அவருக்கு அதை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.
الترجمة التاميلية
وَمَا كَانَ لِنَفۡسٍ أَن تَمُوتَ إِلَّا بِإِذۡنِ ٱللَّهِ كِتَٰبٗا مُّؤَجَّلٗاۗ وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلدُّنۡيَا نُؤۡتِهِۦ مِنۡهَا وَمَن يُرِدۡ ثَوَابَ ٱلۡأٓخِرَةِ نُؤۡتِهِۦ مِنۡهَاۚ وَسَنَجۡزِي ٱلشَّـٰكِرِينَ
மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ்வின் அனுமதியுடன், காலம் குறிக்கப்பட்ட விதிக்கு ஏற்பவே தவிர மரணிப்பது (எந்த) ஓர் ஆத்மாவிற்கு(ம்) சாத்தியம் இல்லை. எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம்.நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்.
الترجمة التاميلية - عمر شريف