155. (நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க பொறுமையுடையவன் ஆவான்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ تَوَلَّوۡاْ مِنكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ إِنَّمَا ٱسۡتَزَلَّهُمُ ٱلشَّيۡطَٰنُ بِبَعۡضِ مَا كَسَبُواْۖ وَلَقَدۡ عَفَا ٱللَّهُ عَنۡهُمۡۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٞ
இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
Jan Trust Foundation - Tamil translation
இரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் திரும்பினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் திரும்பவில்லை.) ஷைத்தான்அவர்களை சறுகச் செய்ததெல்லாம் (தவறுகளில்) அவர்கள் செய்த சிலதின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன்.
الترجمة التاميلية - عمر شريف