166. இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்).
الترجمة التاميلية
وَمَآ أَصَٰبَكُمۡ يَوۡمَ ٱلۡتَقَى ٱلۡجَمۡعَانِ فَبِإِذۡنِ ٱللَّهِ وَلِيَعۡلَمَ ٱلۡمُؤۡمِنِينَ
மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
Jan Trust Foundation - Tamil translation
(அவர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்ட போது (‘பத்ரு' போரில் அவர்களிடம்) அது போன்று இருமடங்கை நீங்கள் அடைந்திருக்க, இது எங்கிருந்து ஏற்பட்டது எனக் கூறுகிறீர்களா? (நபியே) கூறுவீராக: உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
الترجمة التاميلية - عمر شريف