180. எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கிறார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லது என்று எண்ணிவிட வேண்டாம். அது அவர்களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவன் ஆவான்.
الترجمة التاميلية
وَلَا يَحۡسَبَنَّ ٱلَّذِينَ يَبۡخَلُونَ بِمَآ ءَاتَىٰهُمُ ٱللَّهُ مِن فَضۡلِهِۦ هُوَ خَيۡرٗا لَّهُمۖ بَلۡ هُوَ شَرّٞ لَّهُمۡۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُواْ بِهِۦ يَوۡمَ ٱلۡقِيَٰمَةِۗ وَلِلَّهِ مِيرَٰثُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۗ وَٱللَّهُ بِمَا تَعۡمَلُونَ خَبِيرٞ
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் தன் அருளிலிருந்து கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் கஞ்சத்தனம் செய்ததை மறுமைநாளில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படுவார்கள். வானங்கள் இன்னும் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்விற்குரியதே. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்.
الترجمة التاميلية - عمر شريف