183. இவர்கள் ‘‘எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும்வரை அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாது என்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக்கிறான்'' என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்தார்கள். (அப்படி இருக்க, உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?''
الترجمة التاميلية
ٱلَّذِينَ قَالُوٓاْ إِنَّ ٱللَّهَ عَهِدَ إِلَيۡنَآ أَلَّا نُؤۡمِنَ لِرَسُولٍ حَتَّىٰ يَأۡتِيَنَا بِقُرۡبَانٖ تَأۡكُلُهُ ٱلنَّارُۗ قُلۡ قَدۡ جَآءَكُمۡ رُسُلٞ مِّن قَبۡلِي بِٱلۡبَيِّنَٰتِ وَبِٱلَّذِي قُلۡتُمۡ فَلِمَ قَتَلۡتُمُوهُمۡ إِن كُنتُمۡ صَٰدِقِينَ
மேலும் அவர்கள், "எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்" என்று கூறுகிறார்கள். (நபியே!) "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று நீர் கூறும்.
Jan Trust Foundation - Tamil translation
"நெருப்பு (அதை) சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் கொண்டு வரும் வரை ஒரு தூதரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உறுதிமொழி வாங்கினான்'' என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: "எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?''
الترجمة التاميلية - عمر شريف