19. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
الترجمة التاميلية
إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُۗ وَمَا ٱخۡتَلَفَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَهُمُ ٱلۡعِلۡمُ بَغۡيَۢا بَيۡنَهُمۡۗ وَمَن يَكۡفُرۡ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلۡحِسَابِ
நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் விரைவானவன்.
الترجمة التاميلية - عمر شريف