26. (நபியே! பிரார்த்தித்து) கூறுவீராக: ‘‘எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகிறாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகிறாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்.
الترجمة التاميلية
قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلۡمُلۡكِ تُؤۡتِي ٱلۡمُلۡكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلۡمُلۡكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ بِيَدِكَ ٱلۡخَيۡرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيۡءٖ قَدِيرٞ
(நபியே!) நீர் கூறுவீராக
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக: "அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவரை இழிவுபடுத்துகிறாய்; நன்மை உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ எல்லாப் பொருளின் மீதும் பேராற்றலுடையவன்.
الترجمة التاميلية - عمر شريف