28. நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காகவே தவிர எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (நீங்கள்) அல்லாஹ்விடம்தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கிறது.
الترجمة التاميلية
لَّا يَتَّخِذِ ٱلۡمُؤۡمِنُونَ ٱلۡكَٰفِرِينَ أَوۡلِيَآءَ مِن دُونِ ٱلۡمُؤۡمِنِينَۖ وَمَن يَفۡعَلۡ ذَٰلِكَ فَلَيۡسَ مِنَ ٱللَّهِ فِي شَيۡءٍ إِلَّآ أَن تَتَّقُواْ مِنۡهُمۡ تُقَىٰةٗۗ وَيُحَذِّرُكُمُ ٱللَّهُ نَفۡسَهُۥۗ وَإِلَى ٱللَّهِ ٱلۡمَصِيرُ
முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
Jan Trust Foundation - Tamil translation
நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்விடம் எதிலுமில்லை. (அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து) அவர்களை கடுமையாக அஞ்சினால் தவிர (அப்படி செய்யாதீர்கள்). அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.
الترجمة التاميلية - عمر شريف