65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தார் என்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கிறீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
الترجمة التاميلية
يَـٰٓأَهۡلَ ٱلۡكِتَٰبِ لِمَ تُحَآجُّونَ فِيٓ إِبۡرَٰهِيمَ وَمَآ أُنزِلَتِ ٱلتَّوۡرَىٰةُ وَٱلۡإِنجِيلُ إِلَّا مِنۢ بَعۡدِهِۦٓۚ أَفَلَا تَعۡقِلُونَ
வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
Jan Trust Foundation - Tamil translation
வேதக்காரர்களே! இப்றாஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்றாத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. சிந்தித்து புரியமாட்டீர்களா?
الترجمة التاميلية - عمر شريف