7. (நபியே!) அவனே இவ்வேதத்தை(யும்) உம் மீது இறக்கிவைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரியமுடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திற்கேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வைத் தவிர ஒருவரும் அறிய மாட்டார். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர மற்ற எவரும் (இவற்றைக் கொண்டு) நல்லுபதேசம் அடையமாட்டார்கள்.
الترجمة التاميلية
هُوَ ٱلَّذِيٓ أَنزَلَ عَلَيۡكَ ٱلۡكِتَٰبَ مِنۡهُ ءَايَٰتٞ مُّحۡكَمَٰتٌ هُنَّ أُمُّ ٱلۡكِتَٰبِ وَأُخَرُ مُتَشَٰبِهَٰتٞۖ فَأَمَّا ٱلَّذِينَ فِي قُلُوبِهِمۡ زَيۡغٞ فَيَتَّبِعُونَ مَا تَشَٰبَهَ مِنۡهُ ٱبۡتِغَآءَ ٱلۡفِتۡنَةِ وَٱبۡتِغَآءَ تَأۡوِيلِهِۦۖ وَمَا يَعۡلَمُ تَأۡوِيلَهُۥٓ إِلَّا ٱللَّهُۗ وَٱلرَّـٰسِخُونَ فِي ٱلۡعِلۡمِ يَقُولُونَ ءَامَنَّا بِهِۦ كُلّٞ مِّنۡ عِندِ رَبِّنَاۗ وَمَا يَذَّكَّرُ إِلَّآ أُوْلُواْ ٱلۡأَلۡبَٰبِ
அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) அவன்தான் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கியவன். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரியமுடியாத வேறு (முதஷாபிஹ் வசனங்களு)ம் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரிய(முடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்கள் "அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)'' எனக் கூறுவார்கள். அறிவுடையவர்களைத் தவிர (மற்றவர்) நல்லறிவு பெறமாட்டார்.
الترجمة التاميلية - عمر شريف