81. நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்'' (என்று கூறி) ‘‘இதை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என் இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?'' என்று கேட்டதற்கு, அவர்கள் ‘‘நாங்கள் (அதை) அங்கீகரித்துக் கொண்டோம்'' என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் ‘‘இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்'' என்று கூறினான்.
الترجمة التاميلية
وَإِذۡ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيۡتُكُم مِّن كِتَٰبٖ وَحِكۡمَةٖ ثُمَّ جَآءَكُمۡ رَسُولٞ مُّصَدِّقٞ لِّمَا مَعَكُمۡ لَتُؤۡمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥۚ قَالَ ءَأَقۡرَرۡتُمۡ وَأَخَذۡتُمۡ عَلَىٰ ذَٰلِكُمۡ إِصۡرِيۖ قَالُوٓاْ أَقۡرَرۡنَاۚ قَالَ فَٱشۡهَدُواْ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ
(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, "நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக" (எனக் கூறினான்). "நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?" என்றும் கேட்டான்; "நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) "நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்" என்று கூறினான்.
Jan Trust Foundation - Tamil translation
அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக! (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் (நான்) உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம் பிறகு உங்களுடனுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை (நீங்கள்) நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; நிச்சயமாக அவருக்கு உதவவேண்டும். (இதனை) ஏற்றீர்களா? இதன் மீது என் உடன்படிக்கையை ஏற்றீர்களா?'' என்று கூறினான். (அவர்கள்) "(அதை) ஏற்றோம்'' எனக் கூறினார்கள். "ஆகவே, (இதற்கு நீங்களும்) சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்'' என்று (அல்லாஹ்) கூறினான்.
الترجمة التاميلية - عمر شريف