90. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.
الترجمة التاميلية
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ بَعۡدَ إِيمَٰنِهِمۡ ثُمَّ ٱزۡدَادُواْ كُفۡرٗا لَّن تُقۡبَلَ تَوۡبَتُهُمۡ وَأُوْلَـٰٓئِكَ هُمُ ٱلضَّآلُّونَ
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக தாங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் நிராகரித்து, பிறகு நிராகரிப்பையே அதிகப்படுத்தியவர்கள், அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. அவர்கள்தான் வழி கெட்டவர்கள்.
الترجمة التاميلية - عمر شريف