104. எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.
الترجمة التاميلية
يَوۡمَ نَطۡوِي ٱلسَّمَآءَ كَطَيِّ ٱلسِّجِلِّ لِلۡكُتُبِۚ كَمَا بَدَأۡنَآ أَوَّلَ خَلۡقٖ نُّعِيدُهُۥۚ وَعۡدًا عَلَيۡنَآۚ إِنَّا كُنَّا فَٰعِلِينَ
எழுதப்பட்ட ஏடுகளைச் சருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமாக நாம் இதனை செய்வோம்.
Jan Trust Foundation - Tamil translation
ஏடுகளை புத்தகங்களின் மீது சுருட்டுவதைப் போன்று வானத்தை நாம் சுருட்டுகின்ற நாளில்... (திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது.) படைப்பின் முதலாவதை நாம் தொடங்கியது போன்றே அதை மீண்டும் (பழைய நிலைக்கே -இல்லாமைக்கே) திருப்பி விடுவோம். (அனைத்தையும் அழித்து விடுவோம்.) இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்.
الترجمة التاميلية - عمر شريف