22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
الترجمة التاميلية
لَوۡ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَاۚ فَسُبۡحَٰنَ ٱللَّهِ رَبِّ ٱلۡعَرۡشِ عَمَّا يَصِفُونَ
(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
Jan Trust Foundation - Tamil translation
அவை இரண்டிலும் (வானங்களிலும் பூமியிலும்) அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்து இருக்கும். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷுடைய அதிபதியான அல்லாஹ் மகாத்தூயவன்.
الترجمة التاميلية - عمر شريف