25. உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
الترجمة التاميلية
وَمَآ أَرۡسَلۡنَا مِن قَبۡلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِيٓ إِلَيۡهِ أَنَّهُۥ لَآ إِلَٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعۡبُدُونِ
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்; "நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்" என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
Jan Trust Foundation - Tamil translation
நிச்சயமாக விஷயமாவது: “என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” என்று நாம் வஹ்யி அறிவித்தே தவிர உமக்கு முன்னர் எந்த தூதரையும் நாம் அனுப்பவில்லை.
الترجمة التاميلية - عمر شريف