42. (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
الترجمة التاميلية
قُلۡ مَن يَكۡلَؤُكُم بِٱلَّيۡلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحۡمَٰنِۚ بَلۡ هُمۡ عَن ذِكۡرِ رَبِّهِم مُّعۡرِضُونَ
"உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?" என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
Jan Trust Foundation - Tamil translation
(நபியே!) கூறுவீராக! ரஹ்மானிடமிருந்து இரவிலும் பகலிலும் உங்களை பாதுகாப்பவர் யார்? மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள்.
الترجمة التاميلية - عمر شريف