79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.
الترجمة التاميلية
فَفَهَّمۡنَٰهَا سُلَيۡمَٰنَۚ وَكُلًّا ءَاتَيۡنَا حُكۡمٗا وَعِلۡمٗاۚ وَسَخَّرۡنَا مَعَ دَاوُۥدَ ٱلۡجِبَالَ يُسَبِّحۡنَ وَٱلطَّيۡرَۚ وَكُنَّا فَٰعِلِينَ
அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
Jan Trust Foundation - Tamil translation
அதை (அந்த பிரச்சனையை) நாம் சுலைமானுக்கு புரிய வைத்தோம். (இந்த அத்தியாயத்தின் தொடக்கத்திலிருந்து கூறப்பட்ட தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (-நபித்துவத்தையும் இறை சட்டங்களைப் பற்றிய) கல்வியையும் நாம் கொடுத்தோம். தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் நம்மை) துதிக்கின்றவையாக வசப்படுத்தினோம். (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்.
الترجمة التاميلية - عمر شريف